டெல்லியில் டிச.10ம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

டெல்லியில் வரும் 10ஆம் தேதி நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
x
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றன. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வருகிற 10ஆம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன. இதில் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்