இடைத்தேர்தலை காலம் கடத்த தமிழக அரசு முயற்சிக்கிறது - வெற்றிவேல்
புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண பொருட்கள் முழுமையாக சென்றடையவில்லை என வெற்றிவேல் புகார் தெரிவித்துள்ளார்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண பொருட்கள் முழுமையாக சென்றடையவில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி வெற்றிவேல் புகார் தெரிவித்துள்ளார். திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலை காலம் கடத்த தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார் . திருமாவளவனை தாம் வழியில் சந்தித்ததாகவும் வெற்றிவேல் கூறினார்.
Next Story