புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிடுவது மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் - அமைச்சர் காமராஜ்
புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிடுவது திருவாரூர் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர், கஜா புயலால் ஏற்பட்ட சேதாரத்தை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த பணி நிறைவடையும் எனக் கூறினார்.
Next Story