சாட்சி சொல்ல வந்த அமமுக கட்சி நிர்வாகி கொலை..!

கோவையில் கொலை செய்யப்பட்ட அமமுக கட்சி நிர்வாகி ஜெயவேணு என்பவரது உடலை எடுக்க 6 வது நாளாக போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
சாட்சி சொல்ல வந்த அமமுக கட்சி நிர்வாகி கொலை..!
x
கோவைக்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வந்த தூத்துக்குடியை சேர்ந்த அமுமுக நிர்வாகி ஜெயவேணு, காணாமல் போன வழக்கில் 55 நாட்களுக்கு பிறகு அவரது உறவினரும் நண்பனுமாகிய ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ராஜேஷ் கொடுத்த, வாக்குமூலத்தின் அடிப்படையில், வரப்பாளையம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் ஜெயவேணு உடலை தேடப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் 125 அடி உள்ள கிணற்றின் அருகில் குழி தோண்டப்பட்டு வருகிறது. இறந்த ஜெயவேணு உடல் இன்னும் கிடைக்காததால், உறவினர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்