அம்பரீஷ் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் அஞ்சலி
நடிகர் அம்பரீஷின் உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, அம்பரீஷ் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவருக்கு அரசு சார்பில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். இதனிடையே, அம்பரீஷின் உடல், கன்டீரவா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அம்பரீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்களின் வசதிக்காக, மண்டியாவில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Next Story