பாலாறு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி வரலாறு தெரியாமல் கேள்வி எழுப்புகிறார் - துரைமுருகன்

பாலாறு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி வரலாறு தெரியாமல் கேள்வி எழுப்பி உள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலாறு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி வரலாறு தெரியாமல் கேள்வி எழுப்புகிறார் - துரைமுருகன்
x
பாலாறு விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி வரலாறு தெரியாமல் கேள்வி எழுப்பி உள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதை உறுதியாக எதிர்த்தது, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி என்பது  முதலமைச்சருக்கு ஏனோ  தெரியவில்லை என கூறியுள்ளார்.

* திமுக ஆட்சியில் இருந்தவரை பாலாற்றில் ஒரு தடுப்பணை கூட கட்டவிடாமல் தடுத்து வைத்திருந்ததைக் கூடப்  புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர், பேட்டி கொடுத்திருப்பது  வேடிக்கையாக இருக்கிறது என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

* அதிமுக ஆட்சியில்தான் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன என்று கூறியுள்ள அவர், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முதலமைச்சர் பழனிசாமி,  ஏன் தடை உத்தரவு  பெறவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.

* தமிழகத்திற்கும், ஆந்திராவிற்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் கோதாவரி நீரைக் கூட தமிழகத்திற்கு கொடுப்போம் என்று ஸ்டாலினை சந்தித்த பின்னர்,  ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறி சென்றார் என்றால், நாங்கள் பாலாறு பற்றியும் ஆந்திர முதலமைச்சரிடம் பேசினோம் என்றுதானே அர்த்தம் என்றும் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்