"ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" - தமிழிசை

ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
x
ரூபாய் மதிப்பு விவகாரத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை ரூபாய் நோட்டு விவகாரம், பிரதமர் மோடி எடுத்த துணிச்சலான நடவடிக்கை என்றார். ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து திருநாவுக்கரசருக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்