ஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
* தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அந்த கூட்டணியை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
* இதன் ஒரு பகுதியாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா மற்றும் கர்நாடக முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி ஆகியோரை சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியுள்ளார்.
* இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
* வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிப்பது குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story