சபரிமலை விவகாரம்: "உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தவறானது" - இல.கணேசன்
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் தவறானது என பாஜக-வின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
சபரிமலை விவகாரத்தில் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க கோரியும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும் பா.ஜ.க மகளிர் அணி் சார்பில் கோவையில் நடைபெற்ற பேரணியை அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நிர்பந்தம் காரணமாகவே சன்னிதானம் வரை காவல்துறை மூலம் பெண்களை அழைத்து சென்றதாக தெரிவித்தார். மேலும், மத நம்பிக்கைகளை புண்படுத்தியவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல.கணேசன் வலியுறுத்தினார்.
Next Story