"தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம்" - ராமதாஸ்
தோல்வி பயமே தேர்தலை தள்ளிப்போட காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல் 40 ஆண்டுக்கும் மேலாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் தெரிவித்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், உள்ளாட்சி மற்றும் இடைத் தேர்தல் நடத்தப்படாததற்கு காரணம் ஆளும் கட்சிக்கு தோல்வி பயம் தான் என்று குறிப்பிட்டார்.சபரிமலை விவகாரத்தில் அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும், கூட்டணி தொடர்பாக தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன்னர் தெரிவிப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Next Story