"தமிழகத்தில் பா.ஜ.க. பலம் பொருந்திய கட்சியாக மாறும்" - தமிழிசை சவுந்தரராஜன்
"தேசிய கட்சிகளின் ஆதிக்கம் தமிழத்திற்கு வரும் காலம் வந்துவிட்டது" - தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
சென்னையை அடுத்த மணலியில் நவராத்திரியையொட்டி கொலு வைத்து விளக்கு பூஜை செய்த பெண்கள், சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை கொண்டாட கூடாது என ஆணை பிறப்பித்தது கண்டனத்துக்குரியது என கூறினார். தேசிய கட்சிகளின் ஆதிக்கம் தமிழத்திற்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் முகவரியில்லாமல் சென்று விட்டதாகவும் தமிழிசை தெரிவித்தார்.
Next Story