#MeToo பாலியல் குற்றச்சாட்டு - மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம்...

#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் தனக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக பல பெண் பத்திரிகையாளர்கள் தெரிவித்த புகார்களுக்கு மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம் அளித்துள்ளார்.
#MeToo பாலியல் குற்றச்சாட்டு - மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம்...
x
தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை,அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் விளக்கம் அளித்துள்ளார். முகாந்திரம் இல்லாத என் மீதான குற்றச்சாட்டுகள் சிலர் மத்தியில்  பெரிதாக்கப்பட்டுவிட்டது. எனது வழக்கறிஞர்கள் இந்த வழக்கு சம்மந்தமாக ஆலோசித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுப்பார்கள்.மேலும், ஏன் இந்த விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் வர சில மாதங்களுக்கு முன் பெரிதாக்கப்பட வேண்டும் என்றும் ஏதேனும் உள்நோக்கம் கொண்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டுகள் என் புகழுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்