"முதலமைச்சர் பதவிவிலக வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் பதவிவிலக வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
* டெண்டர் விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ஸ்டாலின்
தெரிவித்துள்ளார். 

* உலக வங்கி அளித்துள்ள ஊழல் எதிர்ப்பு விதிகளை அப்பட்டமாக மீறி, தமிழகத்திற்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

* எனவே, சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக விலகி சுதந்திரமான விசாரணைக்கு வழி விட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

* ஆதாரங்கள் அழிப்பிற்கு இடமளித்து விடாமல் காலதாமதமின்றி, இந்த டெண்டர் வழக்கின் ஆவணங்களைப் பெற்று,   விசாரணையை சி.பி.ஐ., துவங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

* ஊழல் புகாரில் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் முதலமைச்சர் பதவி விலக மறுத்தால், தமிழக ஆளுநர் முதலமைச்சரை உடனடியாக பதவிநீக்க வேண்டும் என்று ஸ்டாலின் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்