"டெண்டர் விதிகளை மட்டும் தளர்த்துவது ஏன்?" - ஸ்டாலின்

டெண்டர் சட்ட விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் தமிழக மின் பகிர்மானக் கழகத்திற்கு ஏற்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெண்டர் விதிகளை மட்டும் தளர்த்துவது ஏன்? - ஸ்டாலின்
x
* திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மின்வெட்டு வரப் போகிறது என்று முன் கூட்டியே எச்சரிக்கை செய்தும், அ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் செயற்கையான நிலக்கரிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

* நிலக்கரி இறக்குமதி பற்றி மின் பகிர்மானக் கழகத்திடம் தெளிவான கொள்கை இல்லை என்று சி.ஏ.ஜி அறிக்கையில் முன் கூட்டியே சுட்டிக்காட்டப்பட்டும், கொள்கையை வகுக்காமல், டெண்டர் விதிகளைத் தளர்த்துவது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

* அதானி குழுமம், தமிழக மின் வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து கொடுத்ததாக, வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அதே குழுமத்திடம் இருந்து 150 சதவீதம் அதிக விலை கொடுத்து, வாங்க வேண்டிய அவசியம் என்னவென்றும் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். 

* முறைகேடுகள் மூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி தேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்