ரூ.2.70 கோடியில் சாலை அமைக்கும் பணி - அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்
மழைக் காலத்தில் பாதுகாப்பான மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், தி.மு.க. அரசியல் செய்வதற்காகவே முதலமைச்சர் மீது முறைகேடு வழக்கு தொடர்ந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாலை சேமிப்பு கிடங்கு மேற்கு பகுதியில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக போதுப்பட்டி வரையில், 2 புள்ளி 70 கோடி ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைக் காலத்தில் பாதுகாப்பான மின்சாரம் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், தி.மு.க. அரசியல் செய்வதற்காகவே முதலமைச்சர் மீது முறைகேடு வழக்கு தொடர்ந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
Next Story