டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்திப்பு...
முதலமைச்சர் பழனிசாமிக்கு டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்.பி.க்கள். வரவேற்பு அளித்தனர்.
டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு, விமான நிலையத்தில், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக எம்.பி.க்கள். வரவேற்பு அளித்தனர். பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் சென்றார். அங்கும் அதிமுக எம்.பி.க்களை அவர் சந்தித்தார். இன்று காலை பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story