முதலமைச்சர் பழனிசாமி நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
சென்னையில் இருந்து மாலை 5 மணி்க்கு விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரவு 8 மணி அளவில் டெல்லி சென்றடைந்தார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் உடன் சென்றுள்ளார்.
விமான நிலையத்தில், முதலமைச்சருக்கு, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக எம்.பி.க்கள். வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் சென்றார். அங்கும் அதிமுக எம்.பி.க்களை அவர் சந்தித்தார். நாளை திங்கட்கிழமை காலை
பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள துணை சபாநாயகர் அலுவலகத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story