அமமுக-வை அதிமுகவுடன் இணைக்க தூது விட்டார் தினகரன் - அமைச்சர் தங்கமணி
அமமுக-வை, அதிமுகவுடன் இணைப்பதாக 2 மாதங்களுக்கு முன் தினகரன் தூது விட்டார் தினகரன் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை, அதிமுகவுடன் இணைப்பதாக 2 மாதங்களுக்கு முன், தினகரன் தூது விட்டதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது என்றார். டி.டி.வி தினகரனின் பிரித்தாளும் சூழ்ச்சி, ஒருபோதும் வெற்றி பெறாது என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Next Story