துணைநிலை ஆளுநர் அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவது கேலிக்கூத்தானது - ப.சிதம்பரம் வாதம்

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிடுவது கேலிக்கூத்தானது என சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தரப்பில் வாதிடப்பட்டது.
துணைநிலை ஆளுநர் அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவது கேலிக்கூத்தானது - ப.சிதம்பரம் வாதம்
x
* புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு ஆவணங்களைக் கோருவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய கோரி, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். 

* இந்த மனுவுக்கு துணை நிலை ஆளுநரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், துணைநிலை ஆளுநருக்கு என பிரத்யேக அதிகாரங்கள் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது.

* இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார்.

* அரிதிலும் அரிதான அரசின் நடவடிக்கைகளில் மட்டுமே துணைநிலை ஆளுநர் தலையிட முடியும் என்றும், மாறாக அரசின் அன்றாட நடவடிக்கைகளில் அவர் தலையிடுவது கேலிக்கூத்தானது என்றும் ப.சிதம்பரம் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

* மேலும், ஒவ்வொரு விஷயத்துக்கும், அதிகாரிகளிடம் இருந்து ஆவணங்களைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது ஏற்புடையதல்ல என்றும், அதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமும் இல்லை எனவும் சிதம்பரம் வாதிட்டார். இந்த வழக்கின் வாதம் இன்றும் தொடர்கிறது.

Next Story

மேலும் செய்திகள்