தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்...

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க பல முயற்சிகள் மேற்கொண்ட அரசு, கருணாஸூக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்...
x
* திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடைபெற்றதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

* இந்த செயலுக்கு சட்டப்பேரவைத் தலைவரையும் பயன்படுத்துவது, அரசியல் சட்டத்தையே வெறும் காட்சிப் பொருளாக்குவது போல பேராபத்தாகும் என தெரிவித்துள்ளார். 

* "நிர்வாகப் பேரிடரில்" சிக்கியிருக்கும் தமிழக அரசு குறித்தும், ஊழல், மாநிலத்தின் நிர்வாகம் பற்றி மத்திய அரசுக்கு மாதாந்திர அறிக்கை அனுப்பும் தமிழக ஆளுநரும் அமைதி காப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

* எனவே தமிழக அரசு குறித்து குடியரசுத் தலைவர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்