திருப்பதி கோயிலில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும் - வெங்கய்யா நாயுடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும் என குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதி கோயிலில் முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும் - வெங்கய்யா நாயுடு
x
குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்தார். தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் முன்னிலையில் இஸ்தி கப்பால் என்னும் மரியாதை  அளிக்கப்பட்டது. ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள் 2019 ஆம் ஆண்டுக்கான டைரி மற்றும் காலண்டர்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக குடியரசு துணை தலைவருக்கு ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்யா நாயுடு, முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பதி கோயிலுக்கு தரிசனத்திற்கு வர வேண்டும் என்றார். 



Next Story

மேலும் செய்திகள்