"சபாநாயகரிடம் அனுமதி பெறப்பட்டதா?" - கருணாஸ்

"307 பிரிவில் வழக்குப் பதிவு அளவுக்கு செய்த குற்றம் என்ன?" - கருணாஸ்
சபாநாயகரிடம் அனுமதி பெறப்பட்டதா? - கருணாஸ்
x
கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் 
புலிப்படை கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் உரையாற்றினார். அப்போது, முதலமைச்சர் மற்றும் காவல்துறையினர் பற்றி கருணாஸ் பேசியது தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.  இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு 2 உதவி ஆணையர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சென்று கருணாசை கைது செய்தனர். பின்னர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்த போலீசார், ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதன்பிறகு, கருணாஸ் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட செல்வநாயகம், கார்த்திக், நெடுமாறன் ஆகிய நால்வரும் எழும்பூர் குற்றவியல் நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கருணாஸ் மற்றும் செல்வ விநாயகத்தை அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கருணாஸ் உள்ளிட்டோர்  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்