"செப்.19-இல் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்" - கே.பி.முனுசாமி தகவல்

வரும் 19ஆம் தேதி மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
செப்.19-இல் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - கே.பி.முனுசாமி தகவல்
x
அதிமுகவின் உயர்மட்ட குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமையில் நடந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் எம்பி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. 


"செப்.22, 30-ல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம்" - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தகவல்

அதிமுகவின் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வரும் 19 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றார்.  அதேபோல், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம், வரும் 22ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 30ஆம் தேதி சென்னையிலும் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்