சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி பாதி தான் முடிந்துள்ளது - ராமதாஸ்
வடகிழக்குப் பருவமழை தொடங்க குறைந்த காலமே உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் பாதியளவு கூட முடிவடையவில்லை என ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
* இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையால் சேதமடைந்த மாநகராட்சி சாலைகள் இன்று வரை சீரமைக்கப்படவில்லை என்றும், ஆனால் பல இடங்களில் சாலைகள் போடப்பட்டதாக கணக்கு மட்டும் காட்டப்பட்டு பணம் வழங்கப்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
* குப்பைகளை முறையாக அகற்றாததால் சென்னையில் துர்நாற்றம் வீசுவதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், எவ்வளவு மழை பெய்தாலும், சென்னையில் வெள்ளம் ஏற்படாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Next Story