புதுச்சேரி சாலைக்கு கருணாநிதி பெயர் : முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி கடிதம்
புதுச்சேரியில் 100 அடி சாலைக்கு "டாக்டர் கலைஞர்" பெயர் சூட்டப்படும் என்று அறிவித்த புதுச்சேரி அரசுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி 100 அடி சாலை, காரைக்கால்- திருநள்ளாறு சாலைக்கு "டாக்டர் கலைஞர்" என பெயர் சூட்டப்படும் எனவும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்துள்ளதற்கும் திமுக சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு எழுதிய கடிதத்தில் இந்த முடிவினை எடுப்பதற்கு ஆதரவளித்த அமைச்சரவைக்கும், புதுச்சேரி மக்களுக்கும் திமுக என்றைக்கும் உணர்வுபூர்வமாகத் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story