குஜராத்தில் ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதம் - ஆ.ராசா நேரில் சென்று நலம் விசாரிப்பு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஹர்திக் பட்டேலை, திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நேரில் சந்தித்து பேசினார்.
குஜராத்தில் ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதம் - ஆ.ராசா நேரில் சென்று நலம் விசாரிப்பு
x
பட்டேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த 14 நாட்களாக உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில்,  அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹர்திக் பட்டேலை, திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் சாசனம் மூலமாகவும், பேச்சுவார்த்தை மூலமாகவும் நாட்டில் நல்ல மாற்றம் ஏற்படும் என்றும், அவர் தெரிவித்தார். மேலும், திமுக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் ஆ.ராசா கோரிக்கை விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்