இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு "ஸ்மார்ட் சிட்டி" ஒப்பந்தமா? - ஸ்டாலின் கேள்வி

இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு "ஸ்மார்ட் சிட்டி" ஒப்பந்தமா? என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தமா? - ஸ்டாலின் கேள்வி
x
இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு "ஸ்மார்ட் சிட்டி" ஒப்பந்தமா? என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீர்மிகு நகரங்கள் அமைக்கும் திட்டத்துக்கான பணிகளை நிறைவேற்ற, விடப்படும் டெண்டர்களில் உள்ளாட்சித்துறை அமைச்சரின் தலையீடும், குறுக்கீடும் உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். "மெட்டல் ஷீட்" தயாரிப்பதை முதன்மைத் தொழிலாகக் கொண்ட கம்பெனிக்கு, "மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப்" பணிக்கான டெண்டரை வழங்க மறுத்த நிலையில், அதன் தலைவர் மாற்றப்பட்டு உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சர்ச்சைக்குரிய இந்த கம்பெனிக்கு சென்னை மாநகரத்தில் மின்னணு நிர்வாக ஒப்பந்தம் வழங்கியுள்ள மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் டுபிட்கோ நிர்வாகப் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். இயந்திரங்கள் தயாரிக்கும் ஒரு தனியார் கம்பெனிக்கு "ஸ்மார்ட் சிட்டி மின்னணு நிர்வாகம்" தொடர்பான பணிகளை அளிக்க அழுத்தம் கொடுப்பது, பதவியை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்வது, லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைக்குரிய குற்றம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, "நேர்மையான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி" தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்தி, லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மற்றும் அவருக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்