கருணாநிதியை பெருமை படுத்திய அமெரிக்க நாடாளுமன்றம்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பெருமை படுத்திய அமெரிக்க நாடாளுமன்றம்...
திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். அவரது நினைவிடத்தில் தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கீழ்மன்ற உறுப்பினர் டேனி டேவிஸ் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தும் தீர்மானத்தை கொண்டுவந்தார்.
Representative Danny K Davis of Illinois honoured our great leader @kalaignar89 in the United States House of Representatives in Washington DC. on August 24, 2018. pic.twitter.com/CFvOAWK5OD
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) August 29, 2018
* கருணாநிதி, தனது 14ம் வயதிலிருந்து சமூக நீதிக்காக தன்னை அர்பணித்துக்கொண்டவர்.
* தமிழ் மொழியில் தலை சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், நாவலாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகர்.
* கடந்த 70 ஆண்டுகளில் அரசியலில் தோல்வியை கண்டிராத ஒரே தலைவர். தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பணியாற்றியவர்.
* கருணாநிதியின் புத்தகங்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. அவரது திரைக்கதை, அரசியல் சாத்தியத்தின் பழைய எல்லைகளை தகர்த்துள்ளன.
* சாதி ஒழிப்புக்கு எதிராக போராடியதில் கருணாநிதியின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டேனி டேவிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
Next Story