மத்திய பிரதேசம் : பாஜகவினரை தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ
மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமாங் சிங்கார் பாஜகவினரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் தார் பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமாங் சிங்கார், பாஜகவினரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜன் பாரத் யாத்திரையின் போது தன்டா கிராமத்தில், 5 வயது குழந்தை உயிரிழந்தது. இதற்கு நிதியுதவி வழங்குவதற்காக தார் தொகுதி பாஜக எம்.பி சாவித்ரி தாக்கூர் அங்கு வந்தார். காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்காரும் அங்கு வந்தபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த எம்எல்ஏ., பாஜகவினரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
Next Story