ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு தடை கோரிய வழக்கு : நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் விலகல்
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு தடை கோரிய வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் திடீரென விலகியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில், 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தெரிவித்தார். இதை அடுத்து, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
Next Story