"முதலமைச்சர் மீது ஆரம்ப கட்ட விசாரணை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி முறைகேடு புகாரின் பேரில், முதலமைச்சர் மீது ஆரம்பக் கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மீது ஆரம்ப கட்ட விசாரணை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
x
நெடுஞ்சாலை பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் 4 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறி தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடந்த ஜூன் 13ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.நடவடிக்கை எடுக்காததால், வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.அப்போது ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண்,  புகார் மீது ஆரம்ப கட்ட விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,விசாரணை அறிக்கை அளிக்க 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆட்சேபம் தெரிவித்த தி.மு.க வழக்கறிஞர் இளங்கோ,ஆரம்ப கட்ட விசாரணை தொடங்கி 2 மாதங்களாகியும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என வாதம் செய்தார்.இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 




Next Story

மேலும் செய்திகள்