"துாய்மை இந்தியாவுக்கு உலகளவில் பாராட்டு" - பிரதமர் மோடி பேச்சு
"சுகாதார துறைக்கு நல்ல மருத்துவர்கள் தேவை"
தூய்மை இந்தியா திட்டத்துக்கு மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவம் உலகளவில் பாராட்டப்படுவதாக, பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலம் ஜூனாகட் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தூய்மை முக்கியமானது என்றும், தூய்மை இந்தியா திட்டம் மக்களை நோய்களில் இருந்து பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார். சுகாதாரத் துறையை மேம்படுத்த நல்ல மருத்துவர்களும், உதவியாளர்களும் தேவை எனவும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட மோடி, சர்வதேச தரத்துக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களுடன் சுகாதாரத் துறை மேம்பட வேண்டும் என்றார்.
Next Story