தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடி - பாமக நிறுவனர் ராமதாஸ்
நாள் ஒன்றுக்கு 170 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டியுள்ளதால் தமிழகம் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில், பாமகவின் 30 ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு நாள் ஒன்றுக்கு 170 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டியுள்ளதால் தமிழகம் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story