தகுதி நீக்க வழக்கு - எம்.எல்.ஏ.க்கள் தரப்பு பதில் வாதம்

சபாநாயகரின் உத்தவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தகுதி நீக்க வழக்கு - எம்.எல்.ஏ.க்கள் தரப்பு பதில் வாதம்
x
* சபாநாயகரின் உத்தவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

* 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, சபாநாயகர்,முதலமைச்சர்,கொறடா தரப்பு வாதங்களுக்கு பதிலளித்து,18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.

* முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என 18 பேர் கடிதம் அளித்ததால்,பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என்ற யூகத்தின் அடிப்படையில் சபாநாயகர்  உத்தரவை பிறப்பித்திருக்கிறார் என அவர் குறிப்பிட்டார்.

* கட்சிக்கு எதிராகவும்,தலைமைக்கு எதிராகவும் கருத்து சொல்லலாம் எனவும் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் மட்டுமே தகுதி நீக்கத்துக்கு வழி வகுக்கும் எனவும் வழக்கறிஞர் ராமன் வாதிட்டார்.

* மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,சபாநாயகரின் முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்றும்,சபாநாயகரின் உத்தரவுக்கு எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை எனவும் கூறிய அவர்,  இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவு சட்டப்பேரவை சம்பந்தப்பட்டது அல்ல,அரசியல் கட்சி சம்பந்தப்பட்டது என கூறினார். 

* 18 எம்எல்ஏக்கள் தரப்பு வாதம் இன்னும் முடிவடையாததால், விசாரணையை   வரும் 23-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்