மெரினா இடம் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம், அந்த விவகாரம் முடிந்துவிட்டது - பன்னீர்செல்வம்

மெரினா இடம் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம், அந்த விவகாரம் முடிந்துவிட்டது, அதுகுறித்து பேச வேண்டாம் என துணை முதலமைச்சர் தெரிவித்தார்
மெரினா இடம் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம், அந்த விவகாரம் முடிந்துவிட்டது - பன்னீர்செல்வம்
x
சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி விருந்து - முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு சுதந்திர தினத்தையொட்டி, அரசு சார்பில் சென்னை மாநகரில் மட்டும் 35 இடங்களில் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடந்த விருத்தில் பங்கேற்றார். இதேபோல், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலிலும், அமைச்சர் ஜெயக்குமார் ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயிலிலும் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். சென்னை மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார்.
"மெரினா விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது"
மெரினா விவகாரம் முடிந்துவிட்டதால் அரசியலாக்க வேண்டாம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்