கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட "Z +" பாதுகாப்பு வாபஸ்
திமுக தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்டிருந்த "இசட்" பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
* தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசின் உள்துறை சார்பில் இசட், இசட் பிளஸ், ஒய், எக்ஸ் ஆகிய பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
* இந்திய அளவில், பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
* இதில், ஒரு குண்டு துளைக்காத வாகனம், இரண்டு பாதுகாப்பு வாகனம் மற்றும் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் மொத்தம் 24 பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
* இந்நிலையில்,கருணாநிதி மறைந்ததை அடுத்து, நேற்றுடன் அவருக்கு வழங்கப்பட்டிருந்த "இசட்" பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
Next Story