மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.
கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி - சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய கோரும் வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8.30க்கு மீண்டும் தொடங்கிய வழக்கு விசாரணையில் இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன .
தமிழக அரசு தரப்பு வாதம் :
* அரசியல் காரணங்களுக்காக, ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை வாபஸ் பெறச் செய்தது துரதிருஷ்டவசமானது - அரசு தரப்பு
* திராவிட இயக்கத்தின் முன்னோடியான பெரியார் மெரினாவில் அடக்கம் செய்யப்படவில்லை - அரசு தரப்பு வாதம்
* முன்னாள் முதல்வரான காமராஜருக்கும் மெரினாவில் அனுமதி மறுக்கப்பட்டது - தமிழக அரசு
* முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது - அரசு பதில் மனுவில் தகவல்
* அரசின் உத்தரவை அல்லாமல் பத்திரிகை செய்தி குறிப்பை எதிர்த்து வழக்கு தொடர முடியாது - தமிழக அரசு
* கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தை வழக்கில் இணைக்கவில்லை - தமிழக அரசு
திமுக தரப்பு வாதம் :
* காமராஜர், ராஜாஜி ஆகியோர் கொள்கைக்கும், திராவிட இயக்க தலைவர்கள் கொள்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது - திமுக வாதம்
* இடம் ஒதுக்கும் விவகாரத்தில் அரசு பாரபட்சமாக முடிவு எடுத்துள்ளது - திமுக தரப்பு வாதம்
* எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்கப்பட்டது, அதேபோல தான் ஜெயலலிதாவும் அடக்கம் செய்யப்பட்டார் - திமுக தரப்பு வாதம்.
* 13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும் - திமுக தரப்பு.
* 1988 அரசு உத்தரவுப்படி ஏற்கனவே மெரினாவை மயானமாகவும், நினைவிடமாகவும் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி - திமுக தரப்பு
* அந்த பகுதியில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய கோருகிறோம் - திமுக தரப்பு
* மத்திய அரசு விதிகளின்படி கருணாநிதிக்கு இடம் வழங்க எந்த தடையும் இல்லாதபோது அனுமதி மறுப்பதேன்? - திமுக தரப்பு கேள்வி
* ஜெயலலிதா உடலை அடக்கம் செய்யும்போது எந்த சட்ட சிக்கலும் இல்லை என அரசு கூறியது - திமுக தரப்பு
* தற்போது சட்ட சிக்கல் இருப்பதாக கூறும் அரசு, அவை என்ன என கூறவில்லை - திமுக தரப்பு
* திராவிட தலைவர்கள் மத்தியில் கருணாநிதிக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுகிறது அரசு - திமுக தரப்பு
* தொண்டர்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டால், கண்ணியமான அடக்கமாக இருக்காது - திமுக தரப்பு
தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
* மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெற்ற பின் சட்ட சிக்கல் என்ன உள்ளது? - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
* முந்தைய கால நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு பதில்
"காங். தலைவர்களை அவமதிப்பதா?"
கண்ணியமான அடக்கத்துக்காக காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. காங். தலைவர்கள் சமாதிகள் உள்ள அந்த பகுதியில் அடக்கம் செய்வது கண்ணியமற்றது என்பது அந்த தலைவர்களை அவமதிப்பதற்கு சமம் - அரசுத் தரப்பு
அடக்கம் செய்ய நிலம் ஒதுக்கும்படி கோர யாருக்கும் எந்த உரிமையும் இல்லை -அரசு
"கருணாநிதிக்கு மெரினாவில் இடம்"
உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கண்ணீர் மல்க உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர். ராஜாஜி அரங்கில் கூடியுள்ள தொண்டர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம்.
Next Story