கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றது முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை
திமுக தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றது முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை நிகழ்ந்தவற்றை பார்ப்போம்.
* வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி
* கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் ஆம்புலன்ஸ் மூலம்
அழைத்துச் செல்லப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
* 28 ஆம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டதாகவும், கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
* குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்,
குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் கருணாநிதி சிகிச்சை பெறும் அறைக்கே சென்று பார்த்தனர்.
* கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படமும்,
ஸ்டாலின் அவரிடம் பேசும் புகைப்படமும் வெளியானது.
* முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நிலை
குறித்து கேட்டறிந்தனர்.
* 29 ஆம் தேதி இரவு மருத்துவமனை வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல் நிலையில் லேசான பின்னடைவு ஏற்பட்டதாகவும், பின்னர் நிலைமை சீரடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.
* அன்று இரவு மருத்துவமனை முன்பு குவிந்த தொண்டர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
* இதனைத்தொடர்ந்து 31 ஆம் தேதி மருத்துவமனை
வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும்,அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
* நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,வயது மூப்பு காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக வைத்திருப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இதையடுத்து காவேரி மருத்துமனைக்கு வெளியே மாலை முதலே திரண்ட திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் எழுந்து வா எங்கள் தலைவா என்று மனமுருக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
Next Story