3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் : தமிழக தேர்தல் ஆணையம்

வார்டு மறுவரையறை அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் : தமிழக தேர்தல் ஆணையம்
x
* பழங்குடியினருக்கு உரிய ஒதுக்கீடு இல்லை எனக் கூறி, 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

* இந்த உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தடுத்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் முதலில் 2016-ஆம் ஆண்டு டிசம்பருக்குள்ளும், பின்னர், 2017 மே மாதத்திற்குள்ளும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது. 

* மூன்று முறை காலக்கெடு அளித்தும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை எனக் கூறி, திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

* இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்றைக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை அறிவிக்குமாறு உத்தரவிட்டது.

* வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வார்டு மறுவரையறை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளதாகவும், அந்த ஆணையம் தனது அறிக்கையை ஆகஸ்ட் 31-ம் தேதி சமர்ப்பிக்கும் என்றும், மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது.


* அந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட 3 மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் அதில் தெரிவித்தது. இதற்கிடையே, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக செல்வதால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்