உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்படுமா? - இன்றுடன் கெடு முடிவதால் தேர்தல் ஆணையம் தீவிரம்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்படுமா? - இன்றுடன் கெடு முடிவதால் தேர்தல் ஆணையம் தீவிரம்
x
* தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 

* இதனால் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், திமுக தொடர்ந்த வழக்கை அடுத்து, அறிவிப்பாணையை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

* இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக-வும் மனுக்களை தாக்கல் செய்தன.

* இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப்படவில்லை.

* இதனால், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.  

* இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 6 ஆம் தேதி, அதாவது இன்றைக்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

* இந்நிலையில், தேர்தல் தொடர்பான அட்டவணை இன்று தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்