திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.

திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்ததாகவும் அவர் உடல் நலமுடன் இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி.
x
உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, சனிக்கிழமை அதிகாலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியுவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், காமராஜ், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 10 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடமும், மருத்துவர்களிடமும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்  கேட்டறிந்தார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கே சென்று அவரை பார்த்ததாக தெரிவித்தார். கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்