கருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது, தொண்டர்கள் அமைதி காக்கவும் - ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தொண்டர்களை தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருணாநிதி உடல்நிலை சீராகி வருகிறது, தொண்டர்கள் அமைதி காக்கவும் - ஸ்டாலின்
x
* காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராதவிதமாக, ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு, மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு, தற்போது கருணாநிதி உடல் நிலை சீராகி வருவதாக தெரிவித்துள்ளார். 

* மருத்துவர்கள் குழு தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

* கட்சித் தொண்டர்கள் எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

* மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.






காவேரி மருத்துவமனையில் கலைந்து செல்லாமல் காத்திருக்கும் திமுக தொண்டர்கள்



Next Story

மேலும் செய்திகள்