கருணாநிதி உடல் நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு
குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.
குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் மருத்துவர்களிடம் வெங்கய்யா நாயுடு கேட்டறிந்தார். ஸ்டாலினிடம் பேசிவிட்டு பின்னர் வெங்கய்யா நாயுடு புறப்பட்டு சென்றார். குடியரசு துணை வருகையால் காவேரி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்து. அந்த நேரம் அங்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறிது நேரம் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தார். குடியரசு துணை தலைவர் சென்ற பின்னர் வைகோ உள்ளே அனுமதிக்கப்பட்டார்.
Next Story