துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பதவி விலகுமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு எதிரான சொத்து புகாரை விரைவாக விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்பதாக கூறியுள்ளார். மார்ச் 12ம் தேதியன்றே திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தும் கூட, இந்த அளவுக்கு தாமதம் ஏற்பட, பன்னீர் செல்வம் வகிக்கும் பதவி தான் காரணம் என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், ஊழல் வழக்கு விசாரணை துவங்கியதும் அரசு ஊழியரை சஸ்பென்ட் செய்வது அல்லது பணி மாறுதல் செய்யும் நடைமுறை அமலில் இருப்பதாகவும், எனவே, பொது ஊழியரான பன்னீர் செல்வம், துணை முதலமைச்சராக தொடருவதில் நியாயம் இல்லை என்பதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது போல், விசாரணையை விரைவாக முடிக்க அப்போது தான் ஏதுவாக இருக்கும் எனவும் பன்னீர் செல்வம் விலக மறுத்தால், அவரை நீக்குமாறு ஆளுநருக்கு முதலமைச்சர் பழனிச்சாமி பரிந்துரைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Next Story