#ThanthiTVOpinionPoll இன்று மக்களவை தேர்தல் நடந்தால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் - 41 சதவீத மக்கள்...

தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : இன்று மக்களவை தேர்தல் நடந்தால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் என 41 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.
#ThanthiTVOpinionPoll இன்று மக்களவை தேர்தல் நடந்தால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் - 41 சதவீத மக்கள்...
x
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தந்தி டி.வி. பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 8 ஆயிரத்து 250 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதன் முடிவுகள் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகி வருகிறது. அதில், இன்று மக்களவை தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு என கேட்டதற்கு,  பாஜகவுக்கு என 3 சதவீத மக்களும், நாம் தமிழர் கட்சிக்கு என 3 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பாமகவுக்கு 4 சதவீத மக்களும், ரஜினி மக்கள் மன்றத்திற்கு 5 சதவீதமும், கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு  5 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 8 சதவீதம் பேரும், அதிமுகவிற்கு 25 சதவீதம் பேரும், திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்போம் என 41 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 

கருத்துக்கணிப்பு முடிவுகள் : 

கொடுத்த வாக்குறுதியை மோடி அரசு காப்பாற்றியதா? என்ற கேள்விக்கு காப்பாற்றி உள்ளது என 11 சதவீத மக்களும், ஓரளவுக்கு என 22 சதவீத மக்களும், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என 61 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 



மோடி அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என கேட்டதற்கு ஆதரிக்கிறோம் என 11 சதவீத மக்களும், ஓரளவு என 14 சதவீத மக்களும், ஆதரிக்கவில்லை என 75 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.



மோடி அரசு பற்றி நீங்கள் நினைப்பது என்ன? என்ற கேள்விக்கு மதச்சார்பற்ற அரசு என 14 சதவீத மக்களும், வழக்கமான அரசு என 42 சதவீத மக்களும், மதவாத அரசு என 44 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 



மோடி அரசின் செயல்பாடு எப்படி? என கேட்டதற்கு நன்றாக உள்ளது என  10 சதவீத மக்களும், சராசரியாக உள்ளது என 26 சதவீத மக்களும், சரியில்லை என 64 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 



பிரதமர் மோடியின் தலைமை எப்படி? என்ற கேள்விக்கு, ஆக்கப்பூர்வமானது என 15 சதவீத மக்களும், சராசரியாக உள்ளது என 26 சதவீத மக்களும், பலவீனமானது என 59 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 



எந்த அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது? என கேட்டதற்கு பாஜக கூட்டணி அரசு என 27 சதவீத மக்களும், காங்கிரஸ் கூட்டணி அரசு என 36 சதவீத மக்களும், இரண்டும் இல்லை என 37 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 



அடுத்த பிரதமர் யார் என நீங்கள் நினைக்கிறீர்கள்...? என்ற கேள்விக்கு, நரேந்திர மோடியே அடுத்த பிரதமர் என 24 சதவீத மக்களும், ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என 36 சதவீத மக்களும், 3வது முகம் பிரதமராக வர வேண்டும் என 40 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 



உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்? என கேட்டதற்கு நரேந்திர மோடி என 20 சதவீத மக்களும், ராகுல் காந்தி என 37 சதவீத மக்களும், 3வது முகம் என 43 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.


(24/07/2018) மக்கள் யார் பக்கம் : அடுத்த பிரதமர் மோடியா? ராகுலா?





Next Story

மேலும் செய்திகள்