"ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரகசியமானது,வெளியிட முடியாது"- ராகுல்காந்திக்கு,பிரான்ஸ் அரசு பதில்
நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால்இந்தியாவுடனான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பிரான்ஸ் அரசு பதில் அளித்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான
விவாதத்தில் ராகுல்காந்தி, பேசியது தொடர்பாக, பிரான்ஸ் வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பாக இந்தியா - பிரான்ஸ் இடையே 2008ஆம் ஆண்டு போடப்பட்ட சட்டப்பூர்வ ஒப்பந்தம் ரகசிய தகவல் அடிப்படையிலானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கையாகவே 36 ரபேல் வழங்க, கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் அதிபர், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதால் இந்தியாவுடனான ஒப்பந்தம் ரகசியமானது, அது குறித்த அனைத்து தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story