பிரதமரின் பேச்சு குறித்து சந்திரபாபு நாயுடு விமர்சனம்

பிரதமரின் பேச்சு ஆந்திர மக்களின் மனதை புண்படுத்தி விட்டது
பிரதமரின் பேச்சு குறித்து சந்திரபாபு நாயுடு விமர்சனம்
x
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பிரதமர் மோடி பேசியது, 5 கோடி ஆந்திர மக்களின் மனதை புண்படுத்தி விட்டதாக, அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். தான் டெல்லிக்கு வர இருப்பதாகவும், ஆந்திராவுக்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை நாட்டு மக்களுக்கு கூற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக அரசு மீண்டும் தங்களுக்கு துரோகம் செய்வதாகவும், இது எதிர்பாராதது எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்