மின்கட்டணத்தை குறைக்க அ.தி.மு.க. வலியுறுத்தல்
"ஸ்மார்ட் மீட்டரை சட்டப்பேரவை வளாகத்தில் போட்டு உடைத்து போராட்டம்"
புதுச்சேரியில் ஒரு சில தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டது. இதனால் மின் கட்டணம் அதிகமாக வருவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை வளாகத்தில் ஸ்மார்ட் மீட்டரை தரையில் போட்டு உடைத்து அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
Next Story