தமிழகம் கடன் சுமையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உள்ளது - ராமதாஸ்
வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 15-ஆவது இடத்தில் உள்ளதை ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
* நாட்டில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 15-ஆவது இடத்தில் உள்ளதை ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
* தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலமான தமிழகத்தால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்
* மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் போன்ற தொழில்துறையில் பின்தங்கிய மாநிலங்களுக்கு பின்னால் 15-ஆவது இடத்தை தமிழகம் இடம் பிடித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
* உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகம், தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த, மத்திய அரசு பரிந்துரைத்த சீர்திருத்தங்களை 90 புள்ளி 68 சதவீதம் மட்டுமே செய்ததால் 15-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
* தொழில்துறையில் தமிழகம் அடைந்து வரும் பின்னடைவு , வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்திருப்பதுடன், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் குறைந்திருக்கிறது என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
* இதனால் கடன் சுமை ஆண்டுக்கு 29.85 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடன்களை திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால், தமிழகம் கடுமையான கடன் சுமையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உள்ளதாகவும் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
Next Story