நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 2 ஆயிரத்து 310 ரூபாயாக உயர்த்த வேண்டும் - ஸ்டாலின்
4 வருடங்களாக விவசாயிகள் நலன் குறித்தும், பிரச்சினை குறித்தும் கவலை கொள்ளாத மத்திய அரசு, தற்போது கபட நாடகமாடுவதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 4 வருடங்களாக விவசாயிகள் நலன் குறித்தும், பிரச்சினை குறித்தும் கவலை கொள்ளாத மத்திய அரசு, தற்போது கபட நாடகமாடுவதாக குற்றம் சாட்டினார். மத்திய அரசின் கபட நாடகத்தை டெல்லி சென்று போராடிய தமிழக விவசாயிகள் துல்லியமாக அறிந்து வைத்திருப்பதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உயர்ந்து வரும் இடுபொருள்களின் விலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2 ஆயிரத்து 310 ரூபாய் கிடைக்கும் அளவிற்காவது குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story